அது ஒரு அழகிய மாலை நேரம். அப்போது ஈரமான லேசான காற்று வீசியது. அந்த காற்றுக்கு என் உடம்பு குளுகுளுவென கூசியது. எந்த பக்கம் பார்த்தாலும் சிங்கம் போல் நிமிர்ந்து நிற்கும் கோபுரங்கள் தெரிந்தது. நிற்க கூட நேரம் இல்லாமல் ஜனங்கள் பரபரப்பாக இருந்தன. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேலான உணவகங்களில் இரவு பகல் பாராமல் சும்மா 24 மணிநேரமும் பரோட்டா மற்றும் கறி குழம்பு வாசமும் வீசியது. எப்படி 24 மணி நேரமும் தூங்காம ஜனங்க வேலை பார்க்கிறார்கள் என்று பார்த்தால், இந்த ஊருக்கு பேரு தான் தூங்கா நகரமாம். அட நம்ம மதுரையை பற்றி தாங்க சொல்றேன். இந்த ஊருக்கு இல்லாத பெருமையே இல்லையாங்க, ஏன் சொல்ல போனா, கடவுளுக்கே கல்யாணம் பண்ணி பார்த்த வைங்க இந்த மதுரைக்கார பயங்க. அது மட்டுமா ஜாதி, மதம், பேதம்லா மதுர காரைங்களுக்கு கிடையாது. பழகிட்டா உசுர கூட குடுப்பாய்ங்க. அது தான் தாய் மீனாட்சி வாழுற சொர்க்க பூமி மதுரை தான். இப்ப ஏன் மதுரை பத்தி இவ்வளவு சொல்லுறேன்னு பாக்குறீங்களா. அட வேற ஒன்னும் இல்லைங்க, மதுரையில் பூத்த இரண்டு காதலர்களா பற்றி தான் “தெகட்டாத காதல்” கதை மூலம் பார்க்க போறோம். என்ன மக்களே கதைக்குள்ள போவோமா?
தெகட்டாத காதல்
கண்களின் கரு விழிகள் இறந்தது போல நீர் துளிகள் வழிந்தபடி மனதில் ஏதோ பாரத்தை சுமப்பதை போல மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் நின்று கொண்டு ஒரு பெண் கண் கலங்கி கொண்டிருந்தால். அங்கிருந்த மற்றவர்கள் சாமி கும்பிடாமல் அந்த பெண்ணையே பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு தெரியாது அந்த கண்ணீர் பின்னால் எவ்வளவு வலி இருக்கும் என்று. மூன்று வருடத்திற்கு முன்னால் அந்த சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் இவள் அழுது கொண்டிருக்க மாட்டாள். இவள் பெயர் தான் கருணா தேவி.
மூன்று வருடத்திற்கு முன்னர்..
12ம் வகுப்பில் ஏனோ தானமாக மார்க் எடுத்து விட்டு பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்ந்தவன் தான் ரிஷி. அவனுடன் சேர்ந்து பள்ளி பருவத்தில் இருந்து ஒன்றாகவே படித்து வந்த ஆருயிர் நண்பனான தினேஷும் அதே கல்லூரியில் Same course எடுத்து படித்தனர். ரிஷியை பொறுத்தவரை அவன் சீக்கிரம் எல்லாரோட மிங்கில் ஆகிவிடுவான். என்ன பிரச்சனை வந்தாலும் ஈஸியா ஹாண்டில் செய்வான். குறிப்பாக அவன் அற்புதமான டான்சர், அதுமட்டுமல்லாமல் மற்றவர்களை சிரிக்க வைப்பது அவனோட Character என்று சொல்லலாம். அதுவும் காதல்னா ஐயாவுக்கு ஆகவே ஆகாது. ஆனா பெண்களோட பேச பிடிக்கும். இவன சுத்தி தான் கல்லூரி பெண்களே இருப்பாங்கன்னா பாத்துகோங்களே. இப்படி தான் ரிஷி கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தான். 2 வாரமும் ஜாலியாக கல்லூரி நாட்களை Enjoy செய்தான். அப்போது தான் கருணா தேவி லேட்டாக வந்து கல்லூரியில் சேர்ந்தாள். ரிஷி படிக்கும் அதே courseல் join பண்ணா. tamil naval kathaigal.
கருணா – ரிஷி பார்த்த முதல் தருணம்:
ரிஷி, தினேஷும் கடைசி முன்னாடி பெஞ்சில் அமர்ந்திருந்து நண்பர்களுக்குள் பேசி கலாய்த்து விளையாடி கொண்டிருந்தனர்
மே ஐ கமின் என்ற சத்தம் கேட்டது
ரிஷி திரும்பி Class வாசலை பார்த்த போது பால் போல் வண்ணம் கொண்ட முகத்துடன் இருக்கும் கருணாவை வாயடைத்து போய் பார்க்கிறான்.
என்ன ஆச்சு என்று நண்பர்கள் கேட்க, மச்சா என்னா பொண்ணுடா என்று பெரு மூச்சு விடுகிறான்.
காலில் உள்ள கொலுசு இசை பாட மெல்ல மெல்ல நடந்து ரிஷி அமர்ந்திருக்கும் பெஞ்க்கு பின்னால் அமருகிறார்.
அக்கணம் கருணாவை மேல் வைத்த பார்வை சற்றும் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி.
வகுப்புகள் தொடங்கின interval நேரமும் வந்தது.
அப்போது சாதுவாக இருந்த கருணா தடலான எழுந்து ரிஷி அமர்ந்திருக்கும் பெஞ்சில் தான் நாங்க உட்காருவோம் என்று சக தோழிகளுடன் சண்டை போட்டார்.
திகைத்து பார்த்த ரிஷி, என்ன பொண்ணு நீ, பாக்க சாதுவா இருந்து இப்படி பஜாரி மாதிரி கத்துற என்று கேட்டான்.
அப்படி தான் பேசுவேன் என்ன பண்ணுவ என்று சந்தித்த முதல் நாளே இருவரும் சண்டை போட்டு கொண்டனர். thegattadha kadhal 2024.
தொடரும்..,