தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கும் திட்டம். தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 79,500 பேருக்கு கையடக்கக் கணினி வழங்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கல்வித்துறை திட்டங்கள் :
தமிழகத்தில் நான் முதல்வன் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள், பயிற்சி வகுப்புகளும் வழங்கப்படுவதுடன் மேலும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ‘ஹைடெக் லேப்’ என்ற கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கணினி இணைப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கும் திட்டம்
ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்கும் திட்டம் :
இதையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இதற்காக ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு ‘டேப்லெட்’ எனப்படும் கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு முதல் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி பதவியேற்பு விழா 2024 ! 144 முறை எழுந்து உட்கார்ந்த குடியரசுத்தலைவர் !
இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் 79,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கையடக்க கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்ட வாரியாக கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.