மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற நிலையில் தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் என்று திருச்சூர் நாடாளுமன்ற எம்.பி நடிகர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம்
அமைச்சர் பதவியை மறுத்த சுரேஷ் கோபி :
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 71 மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
கேரளா மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபி பதவியேற்ற பின் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அவர் நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார்.
விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டம் – முதல் கையெழுத்திட்ட பிரதமர் மோடி !
அந்த வகையில் மலையாள தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் தொடர்ந்து படங்களில் நடிக்க இருப்பதால் தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்றும், அமைச்சரவையில் இருந்து விரைவில் தன்னை விடுவிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.