
Actress Noor Malpika Das வீட்டில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை. பாலிவுட் நடிகையான கஜோல் நடித்த ‘தி டிரையல்’ வெப் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை நூர் மாளபிகா தாஸ். அதுமட்டுமின்றி சிஸ்கியான், சரம் சுக் உள்ளிட்ட பல வெப் தொடர்களிலும் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளார். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் மும்பை லோகந்த்வாலா பகுதியில் ஒரு வீடு எடுத்து தங்கி வந்து சினிமா சம்பந்தமான வேலைகளை செய்து வந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் நடிகை நூர் மாளபிகா தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. அதாவது நூரின் வீட்டில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதாக அருகில் இருந்த பக்கத்து வீட்டு காரர்கள் ஒஷிவாரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நடிகை அழுகிய நிலையில் மின் விசிறியில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நூர் மாளபிகாவின் உடலை வாங்க அவரின் உறவினர் யாரும் முன்வரவில்லை என்றும் அவரின் உடலுக்கு இறுதி சடங்கை காவல்துறையே செய்துள்ளது.
POCSO வழக்கில் சிக்கிய “த்ரிஷ்யம்” பட நடிகர்… ரசிகர்கள் ஷாக்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல்