நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வரும் ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நாடாளுமன்ற தேர்தல் :
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றதை தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மேலும் இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை கைப்பற்றியது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சி வெறும் 99 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், 28 கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி 234 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்நிலையில் தேசிய காட்சிகள் யாருக்கும் ஆட்சியமைப்பதிற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அந்த வகையில் பாஜக சார்பில் அதன் கூட்டணி காட்சிகள் இணைத்து மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது.
பதவி பிரமாணம் :
இதனை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் 9 ஆம் தேதி பிரதமராக மோடி பதவி ஏற்றுக்கொண்டார்.
மேலும் அவருடன் சேர்த்து பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச்சேர்ந்த 72 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். உறுப்பினர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் மக்களவை கூட்டத்தொடர் :
அந்த வகையில் மக்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது. இதன் படி 18 ஆவது மக்களவை கூட்டத் தொடரின் முதல் அமர்வில் குடியரசுத் தலைவர் மற்றும் சபாநாயகர் உரையுடன் வரும் ஜூன் 24 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜயபிரபாகரன் – மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் !
மேலும் இந்த கூட்டத்தொடரானது வரும் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.