Home » செய்திகள் » விவசாயிகளுக்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் !

விவசாயிகளுக்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் !

விவசாயிகளுக்கான 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் !

தமிழகத்தில் பசுமை உர பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும் இந்த மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 மெ.டன் பசுந்தாள் உர விதைகள் வழக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த திட்டத்தின் அடிப்படையில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்கள் வழங்கப்படும் என்றும்,

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 – ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !

மண் புழு உரம் தயாரிக்கும் தொட்டிகள் 50 % மானியத்துடன் வழங்கப்படும் என்றும், அத்துடன் கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளிக்க தேவையான டிராக்டர்களையும் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top