சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் - அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் !சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் - அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் !

கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவில் சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் தற்போது இதனை விசாரித்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்னிக்தா ஸ்ரீநாத் என்ற 10 வயது சிறுமி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதி கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் அவர் இந்த மனுவை தனது தந்தை மூலம் வழக்கை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சிறுமி தாக்கல் செய்த மனுவில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலத்தில் சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலுக்கு யாத்திரை செல்ல தனக்கு முழு தகுதி இருப்பதாகவும்,

அத்துடன் தான் பருவம் அடையவில்லை என்பதால் வயது வரம்பை கணக்கில் கொள்ளாமல் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் தான் சபரிமலைக்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து தற்போது மண்டல பூஜை நிறைவடைந்துவிட்டதால், மாதாந்திர பூஜையில் பங்கேற்க அனுமதி வழங்கும்படி திருவாங்கூர் தேவசம்போர்டுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் மனுதாரர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன் மற்றும் ஹரிசங்கர் வி.மேனன் ஆகியோர் ஆகியோர் அடங்கிய அமர்வு அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னர் நேற்று தீர்ப்பு வழங்கினார்

தீர்ப்பின் படி சிறுமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், பெண்கள் சபரிமலைக்கு செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் இருப்பதால்,

தற்போது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முடிவு எடுக்க முடியாது என தெரிவித்தனர்.

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை ! தமிழக அரசு உத்தரவு – காரணம் ஏன் ?

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இந்த விவகாரத்தில் தேவசம் போர்டு அதன் கடமைகளை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செய்ய கடமைப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கருது தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *