பல்கலைகழகங்களில் நடப்பு கல்வியாண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை:
பல்கலைக்கழக மானியக்குழுவின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன், திறந்த மற்றும் தொலைதூர கற்றல் முறைகளில் பயில ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர்சேர்க்கைக்கானஅனுமதி கடந்த 2023 ஆண்டு ஜூலை மாதம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து 2024 – 25 நடப்பு கல்வியாண்டிலிருந்து ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் ஒரு மாணவர் சேர்க்கை,
ஜனவரி -பிப்ரவரி மாதங்களில் ஒரு மாணவர் சேர்க்கை என ஆண்டுக்கு இரண்டு முறை உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தி கொள்ளலாம் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை மாணவர் சேர்க்கையின் நன்மைகள்:
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் வாரிய தேர்வு முடிவுகள் தாமதம், உடல்நல பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் ஜூலை மாதத்தில் கல்லூரியில் சேர முடியாமல் போன மாணவர்களுக்கு இந்த 2 முறை மாணவர் சேர்க்கை என்பது பலனளிக்கும்.
அத்துடன் மாணவர் சேர்க்கையில் பங்குபெற தவறும் மாணவர்கள் ஓராண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் தொழில் நிறுவனங்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடத்தும் கேம்பஸ் இன்டெர்வியுவை வருடத்திற்கு 2 முறை நடத்தி பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிட உதவியாக இருக்கும்.
இதையடுத்து உலகில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்ககளில் இதுபோன்று ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை முறை பின்பற்றப்படுகிறது.
அந்த வகையில் இந்த மாணவர் சேர்க்கை முறையை இந்தியாவில் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவதன் அடிப்படையில் உலக பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்பை பெற முடியும்.
இதன் மூலம் நமது கல்வி தரம் உயர்வதால்மாணவர்களிடையே போட்டியிடும் தன்மையும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
விவசாயிகளுக்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் !
கல்வி நிறுவனங்களுக்கு கட்டாயமில்லை :
மேலும் இந்த ஆண்டிற்கு 2 முறை மாணவர்சேர்க்கை என்பது அனைத்து பல்கலைக்கழகங்களும் பின்பற்றவேண்டிய கட்டாயம் இல்லை எனவும்,
தேவையான உட்கட்டப்பமைப்பு மற்றும் கற்பித்தலுக்கான ஆசிரியர்களை கொண்ட உயர் கல்வி நிறுவனங்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.