இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் - சென்னை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் - சென்னை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் நல நிதி சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த சட்டமானது இளம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் குறைந்தபட்ச உதவித்தொகையை நிர்ணயிக்க வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்த வழக்கானது நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் சங்கங்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சி.கே.சந்திரசேகர் ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க சம்மதிப்பதாகவும், மேலும் அதற்கான சுற்றறிக்கையை வெளியிட இரண்டு மாதங்கள் தேவைப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த வகையில் சென்னை, மதுரை, கோவை போன்ற பெருமாநகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.20,000 உதவித்தொகையும், மற்ற மாவட்டங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

மேலும் இந்த உதவித்தொகையானது பாலின பாகுபாடு பாராமல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் நான்கு வாரங்களுக்குள் இதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டு உறுதி செய்யவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *