தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதியான விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி யிடுவது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் :
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை மாதம் 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வங்கியில் இந்த இடைத்தேர்தலுக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி வரும் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாமக போட்டி :
கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாமக. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.
திரைப்படமாகிறது கிரண் பேடியின் வாழ்கை வரலாறு – ட்ரீம் ஸ்லேட் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு !
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவு செய்த பின்னர் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம் என்று தெரிவித்தார்.