ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்டமான பழைய கட்டிடம் சீரமைக்கப்பட்டு மீண்டும் மதுரை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அட ஆமாங்க முழு விபரமும் கீழே தரப்பட்டுள்ளது. படிச்சு தெரிஞ்சுக்கிட்டு அங்க போங்க. இல்லைனா அங்கே செல்லும்போது வழி தெரியாமல் சுற்றுவது உறுதி.
மதுரை கலெக்டர் அலுவலகம் இடமாற்றம்
ஆங்கிலேயர் கட்டிய கட்டிடம்:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மையமாக வைத்து தான் மதுரை நகரம் உருவாக்கப்பட்டது. கோவிலை சுற்றியுள்ள தெருக்களின் அழகை பார்த்துதான் மதுரையின் தென் பகுதியை ஆங்கிலேயர்கள் நிர்வாகம் செய்தனர். அப்போது ஆங்கிலேயர்கள் பல்வேறு கட்டிடங்களை காட்டினர் .அதில் மதுரை கலெக்டர் அலுவலகம் கருங்கற்களால் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டது. அரண்மனை போன்ற அமைப்பில் அது கட்டப்பட்டதனால் 100 ஆண்டுகள் கழிந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
சீரமைப்பு பணிகள்:
அந்த கட்டிடத்தில் தான் மதுரை கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. நாளடைவில் பல்வேறு புதிய துறைகள் உருவான காரணத்தால் அங்கே போதுமான இடவசதி இல்லை. அதனால் அதே கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் 30 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கலெக்டர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.
திரைப்படமாகிறது கிரண் பேடியின் வாழ்கை வரலாறு – ட்ரீம் ஸ்லேட் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு !
பழைய கட்டிடத்திற்கு மீண்டும் மாற்றம்:
தொன்மை வாய்ந்த அந்த ஆங்கிலேயர் கால கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொண்டனர். அதனால் அந்த கட்டிடம் மீண்டும் தொல்லியல் துறை மூலம் சீரமைக்கப்பட்டது. நேற்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் பூஜைகள் செய்யப்பட்டு பழைய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இனி அங்கு தான் கலெக்டர் அறை மற்றும் அலுவலகம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய பாலம் அமைப்பு:
கலெக்டர் அலுவலகத்தில் இந்த பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு செல்வதற்கு புதிதாக பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.மேலும் வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் தல்லாகுளம் போலீஸ் நிலையம் அருகே கட்டப்பட உள்ளது.