தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மீன்பிடி தடைக்காலம் :
தமிழ்நாட்டில் ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் கடந்த இரண்டு மாதங்களாக மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மீன் வரத்து அதிகரிக்கும் :
தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய இறால், நண்டு உள்ளிட்ட மீன்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்றும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்று வரும்போது ஏற்றுமதி நிறுவனங்கள் விலையை குறைத்து விடுகின்றனர்.
இதனையடுத்து இந்த ஆண்டும் அதே நிலை இல்லாமல் இறால் மற்றும் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்க மீன்வளத்துறை அதிகாரிகள் விலையை நிர்ணயிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.06.2024) ! பவர் கட் செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் இதோ !
மேலும் மீன்பிடி தடைக்காலத்தில் பைபர் மற்றும் நாட்டுப்படகுகள் பிடித்து வந்த மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் விசைப்படகுகள் கடலுக்கு செல்வதால் மீன்கள் வரத்து கணிசமாக அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.