ஏழை, எளிய மக்கள் பசியை போக்க தமிழக அரசில் உருவாக்கப்பட்ட அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அம்மா உணவகம் திட்டம் :
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் குறைந்த விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் அம்மா உணவகம் திட்டமானது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டமானது தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் அமைச்சகத்தால் நடத்தப்படும் உணவு மானியத் திட்டமாகும்.
இந்நிலையில் 2021 ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகங்களுக்கு போதுமான நிதி உதவிகளை அரசு செய்யாத நிலையிலும், பல உணவங்களில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாலும், தற்போது பெரும்பாலான இடங்களில் அம்மா உணவகம் மூடப்பட்டு வருகின்றன. மேலும் இதற்கு சென்னை மாநகராட்சி போதுமான நிதியும் ஒதுக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.
சென்னை மாநகராட்சி ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு :
இதனையடுத்து அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 399 அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு – விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல அனுமதி !
இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி ருசியான புதிய உணவுகளை மீண்டும் வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.