கொல்கத்தா அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து - தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் !கொல்கத்தா அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து - தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் !

கொல்கத்தா அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு படை வீரகள் வரவழைக்கப்பட்டு தீ பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அக்ரோபோலிஸ் என்னும் வணிக வளாகம் அமைந்துள்ளது. மொத்தம் 21 மாடிகளைக் கொண்ட இந்த வணிக வளாகத்தின் 3 வது மாடியில் இன்று மதியம் 12.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் வணிக வளாகத்தில் அமைந்துள்ள புத்தக கடை ஒன்றில் முதலில் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது அதன் பின்னர் வேகமெடுத்த தீயானது மற்ற இடங்களுக்கு பரவத் தொடங்கியது. மேலும் இதை பற்றி தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் கொல்கத்தா நகரில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தீயணைப்பு படி சார்பில் சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – பதறிய பெற்றோர்கள்!!

அத்துடன் தீயணைப்பு படை வீரர்கள் வணிக வளாக கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து, உள்ளே சூழ்ந்திருந்த கரும்புகையை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *