உலகின் முக்கிய பகுதியான சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு: உலகின் பல்வேறு நாடுகளில் கடுமையான வெப்பம் 1நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா பகுதியில் 48 டிகிரி செல்சியஸ் க்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் வருடந்தோறும் இஸ்லாமியர்கள் கொண்டாடி வரும் பக்ரீத்2 பண்டிகை இன்று உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சோகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஹஜ் புனித யாத்திரை நடைபெறும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 14) ஹஜ் புனித யாத்திரை ஆரம்பமானது. இதில் 15 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அங்கு வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்து வரும் நிலையில், ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்த உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் மக்காவிற்கு புனித யாத்திரையில் கலந்து கொண்டுள்ள சுமார் 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெப்ப அலைகள் குறித்து பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு – indian latest news
ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு… இனி இத செஞ்சா அவ்வளவு தான் – உணவு பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா?
சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு