இதுவரை இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள்: முழுமையான விவரம்
- 1937ம் ஆண்டு: பீகார் கொல்கத்தாவில் இருந்து பாட்னாவை நோக்கி சென்ற ரயில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் 119 பேர் உயிரிழந்தனர்.
- 1954ம் ஆண்டு: ஹைதராபாத் அருகே உள்ள யசந்தி நதி பாலத்தின் மேல் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பாலம் உடைந்ததில் 139 பேர் உயிரிழந்தனர்.
- 1956ம் ஆண்டு: ஆந்திராவில் பாலம் உடைந்ததால் பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதில் 125 பேர் பலியாகினர்.
- 1956ம் ஆண்டு: சென்னை – தூத்துக்குடி சென்ற பயணிகள் ரயில் அரியலூர் அருகே உள்ள மருதையாற்று பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியதில் 250 பேர் உயிரிழந்தனர்.
- 1964ம் ஆண்டு: தமிழ்நாட்டில் பாம்பன் – தனுஷ்கோடி ரயில் புயலால் விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.
- 1981ம் ஆண்டு: பீகாரில் ஏற்பட்ட சூறாவளியின் போது பயணிகள் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து ஆற்றில் விழுந்ததில் 800 பேர் உயிரிழந்தனர்.
- 1988ம் ஆண்டு: கேரளாவில் இருக்கும் பெருமான் பாலத்தில் சென்ற ரயில் தடம் புரண்டு ரயிலின் 10 பெட்டிகள் தண்ணீரில் விழுந்ததில் இதில் 105 பேர் உயிரிழந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
- 1987ம் ஆண்டு: அரியலூர் அருகே மருதையாற்று பாலம் நாசவேலை காரணமாக தகர்க்கப்பட்டதன் காரணமாக நடந்த ரயில் விபத்தில் 26 பேர் பலியாகினர்.
- 1995ம் ஆண்டு: டெல்லியில் பிரோசாபாத்தில் 2 ரயில்கள் மோதியதில் 350 பேர் உயிரிழந்தனர்.
- 1999ம் ஆண்டு: கொல்கத்தாவில் இரண்டு ரயில்கள் மோதியதில் குறைந்தது 285 பேர் இறந்தனர்.
- 2005ம் ஆண்டு: ஆந்திராவில் பயணிகள் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்ட போது 77 பேர் உயிரிழந்தனர்.
- 2011ம் ஆண்டு: ஹவுரா-கல்கா ரயிலின் 15 பெட்டிகள் கொண்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 70 பேர் உயிரிழந்தனர்.
- 2012ம் ஆண்டு: ஹூப்ளி-பெங்களூரு ஹம்பி எக்ஸ்பிரஸும் ஆந்திராவில் மோதிக்கொண்டதில் 25 பேர் உயிரிழந்தனர்.
- 2014ம் ஆண்டு: கோரக்பூர் சென்ற கோரக்தாம் எக்ஸ்பிரஸ், கலிலாபாத் நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர்.
- 2016ம் ஆண்டு: உத்தரபிரதேசத்தில் இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூரின் புக்ராயன் அருகே தடம் புரண்டதில் 146 பேர் உயிரிழந்தனர்.
- 2017ம் ஆண்டு: ஜக்தல்பூரில் இருந்து புவனேஷ்வர் செல்லும் ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ், விஜய நகரத்தில் உள்ள குனேரு கிராமத்தின் அருகே தடம் புரண்டதில் 41 பேர் உயிரிழந்தனர்.
- 2017ம் ஆண்டு: பூரி-ஹரித்வார் உத்கல் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் தடம் புரண்டதில் 23 பேர் உயிரிழந்தனர்.
- 2017ம் ஆண்டு: உத்தர பிரதேசத்தின் அவுரியா அருகே டெல்லி செல்லும் கைஃபியத் எக்ஸ்பிரஸின் ஒன்பது ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 70 பேர் காயமடைந்தனர்.
- 2018ம் ஆண்டு: அமிர்தசரஸில் தசரா திருவிழாவிற்காக தண்டவாளத்தில் கூடியிருந்த கூட்டத்தின் மீது பயணிகள் ரயில் மோதியதில் 59 பேர் உயிரிழந்தனர்.
- 2023ம் ஆண்டு: ஒடிசாவில் பாலசோர் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர்
- இன்று மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை – வாடிக்கையாளர்கள் அதிருப்தி .. முதல்வரை நாடிய ஆபரேட்டர்கள்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள “மெகா விளையாட்டு நகரம்”
பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்?
மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து
சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு