தமிழகத்தில் உள்ள சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்: தமிழகத்தின் தலை நகரமான சென்னை பகுதியில் வாழும் மூத்த குடிமக்களுக்கு மாநகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பயண டோக்கன்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டோக்கன்கள் வருகிற ஜூன் 21ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வழங்கப்பட இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் 42 பணிமனைகள், பேருந்து நிலையங்களில் டோக்கன் வழங்க இருக்கிறது. இந்த கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் டோக்கனை பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்றாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றுகளில் ஏதேனும் ஒன்று மற்றும் இரண்டு வண்ணப் புகைப்படங்களை சமர்ப்பித்து டோக்கனை பெற்று கொள்ளலாம். எனவே மூத்த குடிமக்கள் நேரம் தவறாமல் இப்பொழுதே விண்ணப்பித்து கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் டோக்கனை பெற்று கொள்ளுமாறு அரசு தெரிவித்துள்ளது.
அர்ஜுன் – தம்பி ராமையா வீட்டு கல்யாணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா? தீயாய் பரவும் புகைப்படம்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள “மெகா விளையாட்டு நகரம்”
பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்?
மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து
சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு