அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்ய உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நீட் தேர்வு நடைமுறை :
தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நீட் தேர்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து நீட் தேர்வு வினாத்தாள்களில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் வினாத்தாள் விநியோகம், தேர்வு மையங்கள் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட நடைமுறைகள் அடுத்த கல்வியாண்டு முதல் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் கண்டனம் :
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கும், மத்திய அரசிற்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியா? – தவெக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
மேலும் தவறு நடந்திருந்தால் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தவறு இழைப்பது சமூகத்திற்கு ஆபத்தானது என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.