வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி - அந்த தொகுதியில் போட்டியிட போவது யார்?வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி - அந்த தொகுதியில் போட்டியிட போவது யார்?

வயநாடு எம். பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்1 பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. நூலிழையில் ஆட்சியை தவறவிட்ட காங்கிரஸ் கட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் காங்கிரஸ்2 கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நின்ற வயநாடு மற்றும் ரேபரேலி உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது வீட்டில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர்கள் வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டனர். மேலும் அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி எம்பி பதவி குறித்து விவாதம் நடந்தது. அதன்படி ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்பியாக தொடர இருக்கிறார். எனவே வயநாடு தொகுதியை இன்று அவர் ராஜினாமா செய்துள்ளார். மேலும் வயநாடு தொகுதியில் தற்போது பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இது குறித்து மடல் மக்களவை சபாநாயகர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி – lok sabha election 2024 – india election – parliamentary election

  1. Lok sabha election 2024 news ↩︎
  2. congress party news latest update ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *