தமிழ்நாட்டில் மழையின் காரணமாக சின்ன வெங்காயம் விலை விலை உயர்வு. கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. விவசாய பணிகளுக்கு தண்ணீர் அவசியம் தான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே. மழை தண்ணீர் சின்ன வெங்காயத்தின் விளைச்சளை கடுமையாக பாதித்துள்ளது.
சின்ன வெங்காயம் விலை உயர்வு
தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் காரணத்தினால் காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விளையும் தாறுமாறாக எகிறியுள்ளது. அதிலும் சின்னவெங்காயத்தின் அறுவடை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மொத்த மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. சில்லறை விற்பனையை பொறுத்த மட்டில் சின்ன வெங்காயம் ரூ.100 க்கு விற்கப்படுகிறது.
இதே போல் பெரிய வெங்காயம் மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.40 க்கும் சில்லறை விற்பனையில் ரூ.60 வரையிலும் விலை போகிறது.
வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி – அந்த தொகுதியில் போட்டியிட போவது யார்?
வியாபாரிகள் கருத்து:
மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு விருதுநகர், திண்டுக்கல், தாராபுரம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தற்போது மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் அதன் வரத்து குறைந்து விட்டது.
இதனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து ஒட்டு ரக வெங்காயம் எனப்படும் ஒரு வகை வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.அங்கும் போதிய அளவில் விளைச்சல் இல்லாத காரணத்தால் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது.
இதே போல் மற்ற காய்கறிகளின் விலையும் கூடியுள்ளது.சமையலுக்கு அதிக அளவில் பயன்படும் தக்காளியும் ரூ.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் கூகுளின் Gemini AI செயலி அறிமுகம்
ஆன்லைனில் செய்திகளை படிக்க விரும்பும் இந்தியர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியா?
4 மெய்டன் ஓவர் – 3 விக்கெட்டுகள் – உலக சாதனை படைத்த நியூசிலாந்து பவுலர்