
தமிழ்நாடு அரசு சார்பில் வீடில்லா ஏழை மக்களுக்கு அரசின் செலவில் இலவச வீடு வழங்கும் திட்டமான கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கலைஞர் கனவு இல்லம் திட்டம் :
தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் தமிழகத்தில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீடு கட்டித்தரப்படும் இந்த திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கலைஞர் கனவு இல்லம் திட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்கப்பட உள்ளதால் 1 லட்சம் வீடுகள் கட்ட சுமார் 3100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை ஜூன் 25 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப்பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் செய்ய 50% கட்டணச்சலுகை – அமைச்சர் சிவசங்கர் அறிக்கை !
தற்போது நடப்பு நிதியாண்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்ட ரூ.3.10 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.