
Madurai மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
செயற்கை கருத்தரித்தல் மையம் :
தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செயல்பட்டு வந்த செயற்கை கருத்தரித்தல் மையம் தற்போது சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளதை போன்று மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் – 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி ஒதுக்கீடு !
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே ஒரத்தூரில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வாய்த்த அவர் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அரசுமருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களில் 984 பேர் 15 நாட்களில் நியமிக்கப்பட்டதாகவும், மேலும் 2553 மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.