ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை தனக்கு செலுத்த லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.
லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நடிகர் விஷால் வழக்கு :
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் லைகா நிறுவனம் தனக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். விஷால் தாக்கல் செய்த மனுவில் விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவன தயாரிப்பில் உருவான சண்டக்கோழி 2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீட்டு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சண்டக்கோழி 2 படம் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராத தொகையுடன் சேர்த்து ரூபாய் 4 கோடியே 88 லட்சத்தை தான் செலுத்தி உள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.
இதனையடுத்து தான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாயை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
கோவாவில் ஜம்பிங் சிக்கன் என்ற பெயரில் தவளை இறைச்சி விற்பனை – வனத்துறை நடவடிக்கை !
இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கினை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி உத்தரவிட்டார்