தெகட்டாத காதல் Introduction (உள்ளே)
இன்னொரு இடத்தில்,
கதிரவன் என்ற இளைஞன் லோடுமேன் வேலை பார்த்து கஞ்சி குடிக்கும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவன். இவனுக்கு அழகி என்று ஒரு தங்கச்சி இருக்கிறாள். அவளால் வாய் பேச முடியாது.
பள்ளிக்கூடத்தில் 5ம் வகுப்பு படித்து வருகிறாள்.
அழகி என்றால் கதிரவனுக்கு கொள்ள பிரியம்.
அழகி பிறவி ஊமை இல்லை. சில வருடங்களுக்கு முன்னால் நடந்த கோர சம்பவத்தால் தான் அவளுக்கு குரல் போனது.
சில வருடங்களுக்கு முன்னர்,
” கதிரவன் அப்போது 12ம் வகுப்பு படித்து கொண்டிருந்தான். Public Exam ஆரம்பிக்கும் சமயத்தில் தென்காசியில் இருக்கும் குலதெய்வம் கோவிலுக்கு போக வேண்டும் என்று கதிரவன் தந்தை மாரியப்பன், தாய் காமாட்சி கூறினார்கள்.
ஆனால் கதிரவனுக்கு Exam இருக்கிறது என்பதால் அவனை மட்டும் வீட்டில் இருக்கும்படி கூறிவிட்டு, காரில் மூன்று பேரும் சென்றனர். அப்போது தென்காசிக்கு நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது காரின் பிரேக் பிடிக்காமல் போனது.
அந்த சமயத்தில் ஒரே பதற்றமான சூழல் ஏற்பட, தடுப்பு சுவர் மீது கார் எக்குத்தப்பாக மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது அழகி காரில் வெளியே தூக்கி வீசப்பட்டதால் உயிர் தப்பினார்.
இதில் அம்மா அப்பா சாவதை நேரில் சுயநினைவு இல்லாமல் கண்களில் ரத்தம் கலந்த நீருடன் பார்த்து மயக்கம் அடைந்தால்.
உடனே ஹாரன் சவுண்டுடன் வந்த ஆம்புலன்ஸ் அழகியை கைப்பற்றி மருத்துவமனையில் சேர்த்தது.
அங்கு கதிரவன் முதல் தேர்வை நல்லபடியாக முடித்து விட்டு வீடு திரும்பிய போது, தொலைபேசி மூலம் விபத்து குறித்து தெரிந்து கொள்கிறான்.
காதில் பல ஓலங்கள் கிளம்பின. நெற்றியின் மைய குருதியில் ரத்தம் ஓட்டங்கள் ஒன்றாக சேர்ந்தன.
கால்கள் அங்கேயும் இங்கேயும் தடுமாறி Hospital க்கு சென்றான். அம்மா அப்பாவின் கடைசியாக முகத்தை கூட அவனால் பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு முகங்கள் சிதைந்து இருந்தது.
அதை பார்க்க முடியாமல் தட்டு தடுமாறிய கதிரவன் தனது தங்கச்சியின் முகத்தை தேடியது.
ICUவில் இருக்கும் அழகியை பார்த்து “உனக்கு நான் இருக்கிறேன், உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்” என்று மனதுக்குள் அழுதபடி கூறிகிறான்.
ஒரு சில வாரங்களில் அழகி வீடு திரும்பினால். ஆனால் வீல் சேரில் அமர்ந்தபடி குரலை இழந்தபடி தான் வீட்டுக்கு சென்றால்”
(இன்று)
கதிரவன் சின்ன வயசுல இருந்தே ஒரு பொண்ண லவ் பன்றான். ஆன அந்த பொண்ணுக்கு தெரியாது. அந்த பொண்ணு வேற யாரும் இல்ல, கதிரவன் வீட்டுக்கு எதிர் வீட்டுல இருக்கும் யாழினி தான். யாழினி கல்லூரியில் Bcom படித்து வருகிறாள். இந்த ரெண்டு பேருக்குள்ள காதல் பூத்துச்சா இல்லையா, பூத்த காதல் தெகட்டுச்சா தெகட்டலய என்பத இனிமேல் பார்க்கலாம்.
வழக்கம் போல லோடுமேன் வேலைய முடிச்சுட்டு அசப்புல குறட்டை சவுண்டல வீடு அலறும் அளவுக்கு தூங்கி கொண்டிருந்தான்.
அழகி வீல் சேரில் உட்கார்ந்த படி அண்ணனுக்கு டீ போட்டு அண்ணே ஏந்துச்சு ‘டீ”ய குடி கத்துகிறாள்
ஆன அழகி குரல் கதிரவன் செவிக்கு எட்டவில்லை. அதே சமயத்தில் ” நான் college க்கு போய்ட்டு வரேன் அம்மா ” என்று யாழினி சொன்ன வார்த்தை கதிரவன் காதை தடார் என்று தட்டி கூறியது போல் சட்டென்று எழுந்து எதிர்த்த வீட்டை பார்த்தான்.
அவன் பார்த்த அந்த நேரத்தில் டிவியில் “சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என் மீது எப்போது காதல் வந்தது என்று சொல்வாயா” என்ற பாடல் ஓடியது.
பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மாளு யாழினியை பார்த்து லுக்க போடா, இவன் பண்ற ரியாக்சனா பார்த்து அழகியும் ஒரு லுக்கை போடுகிறாள்.
அண்ணே உனக்கு எனக்கு சம்திங்ல இன்னொரு ஆளு வந்துட்டாங்க போல என்று அழகி கூற
ச்சா ச்சா எப்போதும் “உனக்கு எனக்கு மட்டும் தான் சம்திங் சம்திங் செல்லமே” என்று அழகியை கட்டி தழுவுகிறான்.
அந்த அன்பில் மெய் மறந்து இருந்த அழகி கண் திறந்து பார்த்த போது சைக்கிளில் கதிரவன் யாழினியை பின் தொடர்ந்து சென்றான்.
யாழினியை பின்தொடர்ந்து சென்றான்.
கல்லுரியை நோக்கி அவர் சென்ற போது அவளை ஒரு இன்ச் நகர விடாமல் தொடர்ந்து பின் தொடர்ந்தான்.
கல்லூரியை நெருங்கிய நிலையில் college க்கு Opposite la இருந்த ஒரு டீ கடையில் டாப்பை போட்டான் கதிரவன்.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
அங்கு டி கேட்டு வாங்கி குடிக்கும் பொழுது அந்த பக்கம் ரிஷி குரூப் டி வாங்கி குடித்து கொண்டிருந்தது.
கதிரவன் வாங்கிய டி கப்பில் சீனி கம்மியாக இருந்ததால், டி கடைக்காரனை வெளுத்து வாங்கினான்
அப்போது அங்கிருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், விரைந்து வந்த காவல்துறை ரிஷி குருப்பை அரெஸ்ட் செய்கிறது.
அப்போது கல்லூரியில் college day கொண்டாட பட இருந்த நிலையில், ரிஷி குரூப் சிறையில் இருந்த நிலையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
அங்கு கல்லூரியில் கருணா ரிஷியை தேடி அலைந்து கொண்டிருக்கிறாள்……
தொடரும்…,