பெங்களூரு சார்ஜபுராவில் பெண் என்ஜினீயர் ஒருவர் தான் ஆர்டர் செய்த ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு. நல்ல வேலையாக அவர் அந்த பெட்டியின் உள்ளே கை விடாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு
பார்சலில் வந்த பாம்பு:
தற்சமயம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது என்பது மக்களிடையே பெரும் மோகமாகி விட்டது. இவ்வாறு ஆன்லைனில் பொருள்கள் வாங்கும்போது அதிலும் தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. தாங்கள் விரும்பிய பொருளுக்கு பதிலாக வேற பொருட்கள் வருவது, இல்லையென்றால் செங்கல் வருவது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பெங்களூரு என்ஜினீயர் தம்பதிக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஆர்டர் செய்த பொருளுடன் நாகபாம்பு வந்து இருக்கிறது.
பெங்களூரு சார்ஜபுராவில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் என்ஜினீயர் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனியார் ஆன்லைன் விற்பனை மையத்தில் குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் எக்ஸ் பாக்ஸ் கண்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர். அந்த பார்சலை ஆன்லைன் விற்பனை பிரநிதியிடம் இருந்து வாங்கியுள்ளார். 2 நிமிடத்திற்கு பிறகு அந்த பார்சலை திறக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பார்சலில் இருந்து நாகபாம்பு ஒன்று புஷ்ஷ்…என்று சீறிக்கொண்டு தலையை வெளியே நீட்டியுள்ளது. இதை பார்த்து அவரும், அவரது கணவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அலட்சியம்:
அட்டைப்பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த கடினமான கம் டேப்பில் அந்த பாம்பு சிக்கிக்கொண்டிருந்து. அதனால் அது வெளியே வரமுடியாமல் சீறியபடி இருந்தது. அதிர்ஷ்ட வசமாக அவர் அந்த பெட்டிக்குள் கை விடவில்லை. அதனால் அவர் உயிர் தப்பினார். பின்னர் பாம்பு பிடி வீரர் உதவியுடன் அந்த பாம்பு பிடிக்கப்பட்டது.
உதகை தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புகுந்த புலி – வனத்துறை நடவடிக்கை !
வைரல் ஆன வீடியோ:
இந்த சம்பவத்திற்கு ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் அலட்சியமே காரணம் என்றும், வாடிக்கையாளர்கள் உயிருக்கு பாதுகாப்பது இல்லை எனவும் அந்த என்ஜினீயர் தம்பதி குற்றம் சாற்றியுள்ளனர். மேலும் இந்த பாம்புடன் வந்த பார்சலை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
தற்போது அந்த வீடியோ வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகிய வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மன்னிப்பு கோரிய நிறுவனம்:
இந்த சம்பவம் குறித்து புகார் அளித்த பெண் என்ஜினீயரிடம் அந்த ஆன்லைன் விற்பனை நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. மேலும் ஆர்டர் செய்த பொருளுக்கான மொத்த தொகையும் திருப்பி கொடுத்தது. மேலும் பயனாளிகளின் பாதுகாப்பை முதன்மையாக நாங்கள் கருதுகிறோம். இந்த வழக்கை முன்னுரிமை அளித்து விசாரிக்க உள்ளோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.