கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

தரம் குறைந்த நகை செய்ததால் கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல். நகைப்பட்டறை உரிமையாளர் உள்பட 2 பேரை சினிமா பட பாணியில் காரில் கடத்தி ரூ.42 லட்சம் கேட்டு மிரட்டிய சிவகங்கை கும்பல். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை R .S புரம் பொன்னையராஜ புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். 40 வயதான செந்தில்குமார் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 17 ந் தேதி இரவு தனது அக்காள் மகன் விஷ்ணு வாசன் மற்றும் தனது வளர்ப்பு நாயுடன் காரில் சென்றுள்ளார். ஏ.கே.எஸ் நகர் செல்வதாக கூறி சென்ற இவர்கள் இருவரும் திடீரென மாயமாகினர்.

மறுநாள் செந்தில்குமாரின் அக்கா சுதாவுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்கள் மகன், தம்பியை கடத்தி சென்று விட்டோம். நாங்கள் நகை தயாரித்து தர சொல்லியிருந்தோம். ஆனால் 2 பேரும் சரியாக நகை தயாரித்து தரவில்லை. நகை குறைபாடாக இருக்கிறது.அதனால் 2 பேரையும் கடத்தி இருக்கிறோம்.அவர்களை உயிருடன் விடவேண்டும் என்றால் ரூ.42 லட்சம் தரவேண்டும் என கேட்டதாக தெரிகிறது.

அதற்கு சுதா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் பணம் தந்தால் தான் விடுவோம் என்று கூறியதுடன் வாட்ஸாப்ப் காலில் செந்தில்குமாரையும் பேச வைத்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த சுதா இது குறித்து ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா ? ஒரு பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகள் இணைக்கப்படுகிறதா ?

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் இந்த 2 பேரையும் கடத்தி சென்றது சிவகங்கையை சேர்ந்த தனபால், தனசேகர், சதிஷ் என்பது தெரியவந்துள்ளது. பெண் ஒருவருக்காக தங்க வளையல் செய்ய சதீஷ் செந்தில்குமாரை அணுகியுள்ளார். செந்தில்குமாரும் வளையல்களை செய்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த வளையல்களை வங்கியில் அடகு வைக்கும் போது தான் தெரிய வந்துள்ளது வளையல்கள் தரம் குறைந்தது என்று. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் தனது நண்பர்கள் தனசேகர், தனபால் ஆகியோருடன் சேர்ந்து செந்தில் குமார் மற்றும் விஷ்ணு வாசனை கடத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

Join WhatsApp Channel

கடத்தப்பட்ட 2 பேரும் சிவகங்கையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சிவகங்கை சென்றனர்.இதை அறிந்த கடத்தல் கும்பல் செந்தில்குமார், விஷ்ணு வாசன் ஆகியோரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர்.போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு கோவை அழைத்து வந்தனர். மேலும் தப்பியோடிய மூவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *