இன்று வெளிவந்த Lanthar Movie Review லாந்தர் திரைவிமர்சனம். மைனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விதார்த். அதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். இன்று வெளியான லாந்தர் திரைப்படத்தில் விதார்த் ACP ஆக நடித்துள்ளார். இவருடன் நடிகை ஸ்வேதா டாரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எழுதி இயக்கியவர் ஷாஜி சலீம்.
Lanthar Movie Review லாந்தர் திரைவிமர்சனம்
ACP ஆக வலம் வரும் நடிகர் விதார்த் படத்தின் ஆரம்பத்தில் ஒரு கள்ளச்சாராய கும்பலை கைது செய்கிறார். பின்னர் இவருக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில் ஊரில் ஒரு சைக்கோ கில்லர் இருப்பதாகவும் அவன் கண்ணில் படும் அனைவரையும் கொன்று வருவதாகவும் தகவல் வருகிறது. அந்த சைக்கோவை அழிப்பதற்கு விதார்த் தனது போலீஸ் படையுடன் கிளம்புகிறார். இதற்கு பின்னர் என்னவாகியது? இது தான் இந்த லாந்தர் திரைப்படத்தின் கதை சுருக்கம்.
விஜய்யின் “கத்தி” படத்திலிருந்து Delete செய்த சூப்பர் காட்சி.. இந்த சீனையா டெலீட் செஞ்சீங்க? வீடியோ வைரல்!
இந்த கதையில் விதார்த்தின் நடிப்பும் மற்றும் கதையின் நடுவே ஏற்படும் திருப்பம் தவிர சொல்லிக்கொள்ளும்படி கதையில் ஒன்றும் இல்லை. கதையின் மற்ற கதாபாத்திரங்கள் கூட மனதில் நின்றவையாக இல்லை. இந்த படத்தின் எழுத்து, இயக்கம் மற்றும் நடிப்பில் எந்த வித புதுமையும் இல்லை என்றே சொல்லலாம். நடிகர் விதார்த் போலீஸ் கெட்டப்பில் நடித்து இருப்பது மட்டும் சற்று புது முயற்சியாக உள்ளது.
படத்தின் பல காட்சிகள் தெளிவான திரைக்கதையில் இல்லை. சீரியஸ் ஆக எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் நமக்கு காமெடி காட்சிகளாகவே தெரிகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கூட சதிலீலாவதி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் சிரிப்பை வரவைக்கிறது. ஆனால் படத்தில் எந்த வித ஆபாச காட்சிகளும் இல்லை. மொத்தத்தில் இந்த “லாந்தர்” படம் அவ்வளவு பிரகாசமாக எரியவில்லை என்றே சொல்லலாம்.