தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி காரணமாக நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை திமுக ஒத்திவைத்து.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கள்ளக்குறிச்சி விவகாரம் :
தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மேலும் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது, மேலும் பலர் பார்வையிழந்த தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு போராட்டம் :
நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு தொடர்பாக வரும் ஜூன் 24ஆம் தேதி சென்னையில் திமுக மாணவரணி சார்பாக போராட்டம் நடைபெறும் என திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை மறுதினம் திமுக மாணவரணி சார்பில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1735 கோடி அதிகரிப்பு – கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் !
தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் காரணமாக இந்த போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.