நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் காரணமாக நாளை நீட் மறுதேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நீட் தேர்வு முறைகேடு :
கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. அந்த வகையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதனையடுத்து வெளியான நீட் தேர்வு முடிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீட் மறுதேர்வு :
நீட் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்ட விவகாரத்தின் அடிப்படையில், நீட் இளங்கலை நுழைவு தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி – நீட் தேர்வு போராட்டத்தை ஒத்தி வைத்த திமுக !
மேலும் 7 புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவ, மாணவியர்கள் தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.