தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத்தளங்களில் ஒன்றான நீலகிரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிறுத்தை நடமாட்டம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சிறுத்தை நடமாட்டம் :
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் ஊட்டிக்கு அருகே உள்ள தூனேரி என்ற கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இன்று அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது . இந்த காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வனத்துறை நடவடிக்கை :
இதனையடுத்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன் பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் தனியாக வெளியே வர வேண்டாம் எனவும்,
3500 சதுரடி வீடு கட்ட அனுமதி தேவையில்லை ! வீட்டு வசதி வாரியம் சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு !
மேலும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.