தற்போது நாடு முழுவதும் எழுந்த நீட் தேர்வு சர்ச்சையால் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மாற்றம் செய்வதற்கு 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மாற்றம்
நீட் தேர்வு :
கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிலையில் நீட் நுழைவு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. அவ்வாறு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றசாட்டு எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
தேசிய தேர்வு முகமை கட்டமைப்பு மாற்றம் :
இந்தியாவில் நீட், நெட் தேர்வு போன்ற அகில இந்திய தேர்வுகளை நடத்துவது தேசிய தேர்வு முகமையாகும். இந்நிலையில் நீட் தேர்வு முடிவில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து தற்போது தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்புகளை மாற்ற உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நீட், நெட் போன்ற தேர்வுகளை வெளிப்படையாக நடத்த முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் – நாளை 1563 பேருக்கு மறுதேர்வு என அறிவிப்பு !
அந்த வகையில் இந்த குழுவானது தேர்வு செயல்முறையில் திருத்தம் , தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல், என்டிஏவின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த பரிந்துரைகளை இந்த குழு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.