உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார், இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அயோத்தி ராமர் கோவில் :
கடந்த சில நாட்களுக்கு முன் உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போது இந்த ராமர் கோவிலில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் அயோத்திக்கு ஆன்மிக பயணம் சென்று வருகின்றனர்.
ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார் :
அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சர்கர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீட்சித் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86, கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பால ராமரை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வை முன்னின்று நடத்தியவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி – நீட் தேர்வு போராட்டத்தை ஒத்தி வைத்த திமுக !
அந்த வகையில் கடந்த சில நாட்களாக இவர் உடல்நலம் குன்றியிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.