நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக தற்போது முக்கிய குற்றவாளி உத்திரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு விவகாரம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நீட் தேர்வு முறைகேடு :
நடந்து முடிந்த மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றசாட்டுகள் எழுப்பப்பட்டன. மேலும் இந்த சம்பவத்தில் இந்த நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகாமியை கண்டித்து உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக ரவி அட்ரி என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய குற்றவாளி கைது :
நீட் தேர்வுக்கான வினாத்தாளை விற்பனை செய்த மோசடி கும்பலின் தலைவன் ரவி அட்ரி என்பவர் உத்திரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் உத்திரப்பிரதேசத்தில் இருந்து நீட் வினாத்தாளை கசிய விட்டதும், ஜார்க்கண்ட் வழியாக பீகாருக்கு அனுப்பி வைத்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மாற்றம் – உயர்மட்ட குழு அமைப்பு !
மேலும் நீட் வினாத்தாளை கசிய விட்டது மட்டுமன்றி ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளிலும் ரவி அட்ரிக்கு தொடர்பு உள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.