தற்போது தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை வீரர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழக மீனவர்கள் :
தற்போது இலங்கையை சார்ந்த கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. மேலும் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதாக இதற்கு காரணம் கூறப்படுகிறது.
மீனவர்கள் கைது :
அந்த வகையில் நேற்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதன் அடிப்படையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களை 3 படகுகளுடன் சென்று இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். மேலும் இந்த 18 தமிழக மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறைமுக கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை செய்து வருகிறார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் – முக்கிய குற்றவாளி உத்திரப்பிரதேசத்தில் கைது !
இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களும் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் ஆவர். இதன் மூலம் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தற்போது அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.