Home » செய்திகள் » கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் – ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்கியது அம்பலம் !

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் – ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்கியது அம்பலம் !

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் - ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்கியது அம்பலம் !

கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம், இதனை தொடர்ந்து ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த உரிமையாளர் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளசாராயத்தை அருந்தி 57 க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் 100 க்கும் மேற்பட்டோர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான மாதேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஓட்டல் உரிமையாளர் சக்திவேல் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஓட்டல் உரிமையாளரின் gst எண்ணை பயன்படுத்து விருத்தாசலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு மூன்று முறை 1000 டின்னர் எடுத்துக்கொடுத்தாக கள்ளச்சாராய வழக்கில் கைதான மாதேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் விருத்தாசலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையை ஆய்வு செய்த போலீசார் அனைத்தும் தின்னர் என்பதை உறுதி செய்தனர்.

தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை – முழு தகவல் இதோ !

அத்துடன் ஹோட்டலில் cctv காட்சிகளில் மாதேஷ் வந்து செல்லும் காட்சியும் மெத்தனாலை ஹோட்டலில் வைத்து எடுத்து செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஜிஎஸ்டி எண்ணை கொடுத்த ஹோட்டல் உரிமையாளர் சக்திவேலை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top