ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு - 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு - 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு திட்டத்தினை 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகளில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

தற்போது கேள்விநேரம் முடிந்ததும் உயர் கல்வித்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் – அதிமுக புறக்கணிப்பு !

அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10000 கிலோமீட்டர் தமிழநாட்டில் உள்ள கிராம ஊராட்சி சாலைகள் ரூபாய் 4000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *