தமிழ்நாட்டில் புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் தருவதாக சூப்பர் அறிவிப்பு. அதாவது அமைப்பு சாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண் அல்லது திருநங்கை டிரைவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி கணேசன் அறிவித்துள்ளார்.
புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம்
தமிழக சட்ட சபை கூட்டத்தில் நேற்று அமைச்சர் சி.வி கணேசன் தொழிலாளர் நல கோரிக்கைகளுக்கு பதிலளித்தார். அதில் அவர் ” தொழிலாளர்களுக்கு ஏதேனும் விபத்து நேரிட்டால் கிடைக்கும் உதவி தொகைக்கு பல ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது விபத்து நடந்த 48 மணி நேரத்தில் உதவி தொகை வழங்கப்படுகிறது.
கரூரில் கட்டுமான தொழிலாளர்கள் 2 பேர் விபத்தில் இறக்க நேரிட்ட போது அதற்கான உதவி தொகை ரூ.10 லட்சம், 2 நாட்களுக்குள் உரியவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில் இதுவரை 21 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1646 கோடி அளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணிநியமன ஆணைகளை இந்த அரசு வழங்கியுள்ளது” என்று கூறினார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு – நிக்காமல் கேட்கும் மரண ஓலம்!!
இதனை தொடர்ந்து அமைச்சர் சி.வி.கணேசன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண் அல்லது திருநங்கை டிரைவர்கள் , புதிதாக ஆட்டோ வாங்கும் செலவில் தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்ற அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு பட்டாசு உற்பத்தியின் போது பின்பற்றக்கூடிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து புத்தாக்க பயிற்சி வழங்கப்படும். தொழில்களில் வல்லுனர்களாக விளங்குபவர்களின் கருத்துக்களை வீடியோக்களாக பதிவு செய்து அதை கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஒளிபரப்பபடும்.
மாணவர்களின் பொது அறிவை வளர்க்க, அரசு தொழிற்பயிற்சி நிலைய விடுதிகளில் ஸ்மார்ட் டிவி மற்றும் இணைய தளத்துடன் கூடிய நூலகங்கள் அமைக்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி எடுக்க வசதி செய்து தரப்படும்.