வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு போட்டித்தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
போட்டித்தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி
தமிழ்நாடு சட்டப்பேரவை :
தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை மானியகோரிக்கை கூட்டத்தொடரானது கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று முற்பகல் முதல் உயர்கல்வி, பள்ளிக் கல்வித்துறை, வருவாய்த் துறை போன்ற துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதன் பின்னர் பிற்பகலில் நீதி நிர்வாகம், சிறைகள் சட்டத் துறை, செய்தி மற்றும் விளம்பரம், தமிழ் வளர்ச்சி ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
மகளிர் தங்கும் விடுதி ;
அந்த வகையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் கூடுதலாக பணிபுரியும் மகளிர் விடுதிகள் இந்தாண்டு முதல் கட்டப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மேலும் இந்தாண்டு சென்னையில் புதிதாக பணிபுரியும் மகளிருக்கான விடுதி அரசால் கட்டப்பட உள்ளதாகவும், அத்துடன் மாத வாடகையில் விடுதிகளில் தங்குவோர் மட்டுமின்றி, பிற இடங்களில் இருந்து போட்டித் தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஓரிரு நாட்கள் வாடகைக்கு தங்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ! இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !
இதனை தொடர்ந்து சென்னை, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் கூடுதலாக பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்ட இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்ட பின் பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.