"கருடன்" பட இயக்குனருடன் கூட்டணி வைத்த தி லெஜண்ட் சரவணன் - வெளியான தரமான போஸ்டர்!!"கருடன்" பட இயக்குனருடன் கூட்டணி வைத்த தி லெஜண்ட் சரவணன் - வெளியான தரமான போஸ்டர்!!

சமீபத்தில் வெளியான “கருடன்” பட இயக்குனருடன் கூட்டணி வைத்த தி லெஜண்ட் சரவணன்: சென்னையில் “தி லெஜண்ட்” என்ற பிரம்மாண்ட கடையை நடத்தி வருபவர் தான் தி லெஜண்ட் சரவணன். இவர் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தி லெஜண்ட். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி அவருக்கு நடிப்பு சரியாக வரவில்லை என்றும் பலரும் கடுமையாக விமர்சனத்தை முன் வைத்து வந்தனர்.

இருந்தாலும் அவர் தனது கலை பயணத்தை தொடர்ந்து நீடித்து வருகிறார். அதன்படி அவரின் இரண்டாவது படத்தை குறித்து விரைவில் அப்டேட் வரும் என்று சில மாதங்களுக்கு முன்னே அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் அடுத்த படம் குறித்து சூப்பர் நியூஸ் வெளியாகியுள்ளது.

அதாவது, சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தான் தி லெஜண்ட் சரவணன் படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்து துரை செந்தில்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார். அதில் சரவணன் மாறுபட்ட தோற்றத்தில் காட்சி அளித்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. tamil cinema news – garudan movie – the legend saravanan – cinemalover

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *