புஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனைபுஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனை

செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி விட்டு பூமிக்கு திரும்பும் புஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனை படைக்கும் என்பது இஸ்ரோவினால் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இதில் பங்கேற்ற மற்றும் ஆதரவு அளித்த அனைத்து குழுவிற்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டு தெரிவித்தார்.

செயற்கை கோள்களையும், விண்கலன்களையும் சுமந்து சென்று விண்ணில் நிலைநிறுத்தி விட்டு பூமிக்கு பத்திரமாக திரும்பி வரும் ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ளது. இந்த ராக்கெட் ஏற்கனவே 2 முறை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் இதன் 3 வது கட்ட சோதனை நேற்று கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் சோதனை தளத்தில் நடந்தது.

இந்த 3 வது சோதனையானது பலத்த காற்று மற்றும் சவாலான சூழ்நிலைகளுக்கிடையே சோதித்து பார்க்கப்பட்டது. மோசமான காலநிலையிலும் புஷ்பக் ராக்கெட் எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவே இந்த இறுதி கட்ட சோதனை.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ! இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

இந்திய விமான படையின் ‘சினூக்’ ஹெலிகாப்டரில் 4.5 கி.மீ உயரத்தில் இருந்து மறுபயன்பாட்டு ராக்கெட் விடுவிக்கப்பட்டது. அதன் பிறகு பூமியை நோக்கி ராக்கெட் வெற்றிகரமாக திரும்பியது. வழியிலே தவறுகளை தானாகவே சரி செய்தது. ஓடுதளத்தின் மையப்பகுதியில் கிடைமட்டமாக வெற்றிகரமாக தரை இறங்கியது. அப்போது அதன் வேகம் மணிக்கு 320 கி.மீட்டராக அதிகரித்தது. இது போர் விமானத்தின் வேகத்தை விட அதிகம். ஆனால் தரையை தொட்டவுடன் அதன் வேகம் மணிக்கு 100 கி.மீ ஆக குறைந்தது.

Join WhatsApp Group

இந்த சோதனை ஓட்டத்தின் திட்ட இயக்குனராக இருந்தவர் முத்துபாண்டியன். ஏவுகலன் இயக்குனராக இருந்தவர் பி.கார்த்திக் ஆவார்கள். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் தலைமையிலான இத்திட்டத்தில் இஸ்ரோ பல்வேறு மையங்களும், ஸ்ரீ ஹரி கோட்டா சதிஷ் தவான் விண்வெளி மையமும் பங்கேற்றன. இந்திய விமான படை, கான்பூர் ஐ.ஐ.டி இந்திய எண்ணெய் கழகம், இந்திய விமான நிலையங்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் சோதனை நடத்தப்பட்டது.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *