தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அறிவிக்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பேரிடர் நிவாரண மையம் :
தமிழக சட்டப்பேரவையில் கடந்த நான்கு நாட்களாக மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை விவாதத்தின் போது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் புயல், அதிகன மழை, வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்படும் சென்னை மற்றும் முக்கிய புறநகர் பகுதிகளில் ரூ. 36 கோடி செலவில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் அறிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெப்ப அலையின் தாக்கம் மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டித்தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி – சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு !
தூத்துக்குடியில் பல்நோக்கு நிவாரண மையம் :
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பதிப்பிற்குள்ளாகக்கூடிய மக்களை தங்க வைக்க ரூ .17.50 கோடி மதிப்பீட்டில் இரண்டு பல்நோக்கு நிவாரண மையங்கள் கட்டப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.