ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்போது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல அறிவிப்புகளை சட்டமன்றத்தில் அறிவித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் வரும் ஜனவரி 2026க்குள் காலியாக உள்ள 46,000 அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 65,483 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

மேலும் 5.08 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *