தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் :
தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் கடந்த நான்கு நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேளாண்துறை, நிதித்துறை, நீதித்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் புதிய திட்டங்களை தொடங்கிவைத்த பின்னர் அதனை பற்றி எடுத்துரைத்தனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறாமல் இருந்தன. தற்போது நாடாளுமன்ற தேர்தல் தற்போது முடிவடைந்ததையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடர் மீண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பழைய ஓய்வூதிய திட்டம் :
இன்று சட்டப்பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது நிதி மற்றும் மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால நன்மைகள் குறித்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன.
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC – குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் !
இது குறித்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவுகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் இதன் சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைத்து பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும்
அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ
தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா
நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC