"கல்கி 2898 AD" படம் எப்படி இருக்கு? பாகுபலி பிரபாஸ் வெற்றி பெற்றாரா? இல்லையா? ரசிகர்கள் கருத்து இதோ!"கல்கி 2898 AD" படம் எப்படி இருக்கு? பாகுபலி பிரபாஸ் வெற்றி பெற்றாரா? இல்லையா? ரசிகர்கள் கருத்து இதோ!

உலகமெங்கும் வெளியாகியுள்ள “கல்கி 2898 AD” படம் எப்படி இருக்கு? இன்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்  கல்கி 2898 AD திரைப்படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கி இருந்த இந்த படத்தில் ஹீரோவாக பாகுபலி பிரபாஸ் நடித்திருந்தார். மேலும் இவருடன் சேர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பாட்னி, பசுபதி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.  சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. ஹாலிவுட்டை மிஞ்சும் அளவிற்கு காட்சிகள் கட்டப்பட்டு இருந்தது. மேலும் 600 கோடியில் உருவான இந்த திரைப்படமும் எப்படி உள்ளது பர்ஸ்ட் ஷோ பார்த்த ரசிகர்களின் மனநிலை என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கல்கி படத்தின் பர்ஸ்ட் Half  பேரழிவு..சில இடங்களில் slow ஆக போகிறது.
பிரபாஸின் காமெடி எங்கையும் ஒர்க் அவுட் ஆகல ரசிகர்களை  இரிட்டேட் செய்கிறது. 2வது பாதி கொஞ்சம் சுமார்தான். ஹீரோவை விட அமிதாப் பச்சனும், தீபிகா படுகோனேவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கமல்ஹாசன் வில்லனாக தரமாக நடித்துள்ளார். இடையில் வரும் பாடல்கள் கதையை தூக்கி விடுகிறது. அதை விட பேக் ரவுண்ட் மியூசிக் அற்புதம். அதிகமாக எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே மிச்சம். இந்த படத்துக்கு ஐந்துக்கு 2 மதிப்பெண்கள் கொடுக்கலாம். tamil cinema news – pan india cinema news – Prabhas – Amitabh Bachchan – Kamal Haasan – Deepika Padukone – pasupathy – keerthy suresh – Disha Patani

மேலும் கல்கி முதல் நாள் மட்டுமே ரூ. 110 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே வசூல் செய்துள்ளதாம். ஆனால், படக்குழு முதல் நாள் மொத்த வசூல் ரூ. 200 கோடி வரவேண்டும் என எதிர்பார்த்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது. எனவே பொறுத்து இருந்து பார்க்கலாம் இப்படம் முதல் நாள் வசூல் எத்தனை கோடிகளை தாண்டுகிறது என்று.

வெங்கல் ராவ்க்கு நிதியுதவி வழங்கிய சிம்பு… ச்சா… லிட்டில் சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *