
மாணவர்கள் படிக்கும் 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமன்னா வாழ்க்கை வரலாறு: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தமன்னா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்து வசூல் சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற “அச்சோ அச்சச்சோ” பாடலில் கிளாமரான ஆடைகளை அணிந்து பட்டையை கிளப்பி இருந்தார்.
இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற watsaap பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பாடலை பார்ப்பதற்காகவே தியேட்டரில் கூட்டம் அலைமோதியது என்று கூட சொல்லலாம். இதனை தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹெப்பால் பகுதியில் சிந்தி என்ற ஒரு தனியார் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் 7 வது வகுப்பு பாடத்திட்டத்தில் தமன்னா புகைப்படம் மற்றும் அவரை பற்றி சில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளனர். தெளிவாக சொல்ல போனால், ‘சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை’ என்ற பாடத்தில் தான் தமன்னாவை பற்றி சில குறிப்புகள் போடப்பட்டுள்ளது.
7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமன்னா வாழ்க்கை வரலாறு – ஷாக்கான மாணவர்கள் பெற்றோர்கள்!!
அதில், தமன்னா பிறந்த தேதி, நடித்த திரைப்படங்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பார்த்த மாணவர்களின் பெற்றோர்கள் தமன்னாவுக்கும் பாடத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி இது தொடர்பாக குழந்தை உரிமை ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத்திடம் பெற்றோர்கள் புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்தின் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இவர் ஹிந்தியில் நடித்த Lust Stories 2 படத்தில் அளவுக்கு அதிகமான கவர்ச்சி சீன்கள் இடம்பெற்றன. இதை பார்த்த ரசிகர் அனைவரையும் அருவருக்க செய்தது. அந்த படத்தில் தன்னுடன் நடித்த விஜய் வர்மாவை தான் தற்போது தமன்னா டேட்டிங் செய்து வருகிறார். விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
“கல்கி 2898 AD” படம் எப்படி இருக்கு? பாகுபலி பிரபாஸ் வெற்றி பெற்றாரா? இல்லையா? ரசிகர்கள் கருத்து இதோ!
இந்த நியூஸ் சூப்பரா இருக்கும் படிச்சு பாருங்களே?
வெங்கல் ராவ்க்கு நிதியுதவி வழங்கிய சிம்பு
தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா
வடிவேலுவின் மாங்காயை பஞ்சராக்கிய நடிகரை ஞாபகம் இருக்கா?
“ராயன்” படத்தின் ரிலீஸ் தேதியை குறித்த நடிகர் தனுஷ்.
“Pirates of the Caribbean” பட பிரபலம் திடீர் மரணம்
“கருடன்” பட இயக்குனருடன் கூட்டணி வைத்த தி லெஜண்ட் சரவணன்