கமலின்-இந்தியன் 2 படத்தை வெளியிட தடையா: தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் கமல்ஹாசன். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசராமல் நடித்து முடிப்பவர். அதனாலேயே இவரை ரசிகர்கள் உலக நாயகன் என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி நடிப்பையும் தாண்டி, சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மற்றும் இயக்கியும் உள்ளார். குறிப்பாக அவர் இயக்கிய விஸ்வரூபம் பார்ட் 1 ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம். இதனை தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்போது வில்லனாகவும் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்படி தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கல்கி படத்தில் பாகுபலி பிரபாஸ்-க்கு வில்லனாக நடித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தை வெளியிட தடையா
இதனை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்த இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு புதிய சிக்கல் ஒன்று கிளம்பியுள்ளது.
அதாவது மதுரை HMS காலனியை சேர்ந்த மஞ்சா வர்மக்கலை தற்காப்பு கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமி-யின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் ,மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இந்தியன் பார்ட் 1 எடுக்கும் பொழுது வர்மக்கலை முத்திரையை வைக்க எங்களிடம் அனுமதி வாங்கினார்கள்.
ஆனால் இந்தியன் 2 படத்திற்காக முறைப்படி எங்களிடம் அனுமதி வாங்கவில்லை என்று கூறி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக படக்குழு பதில் அளிக்க வேண்டும் என்றும் இந்த விசாரணையை ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.