Bitter gourd juice: பாகற்காய் ஜூஸில் இவ்வளவு நன்மைகள் இருக்கா: பொதுவாக நம் சாப்பிடும் காய்கறிகளில் சிலவற்றை கசப்பாக இருக்கக்கூடும். அதை உட்கொள்ள நமக்கு எப்போதும் பிடிப்பதில்லை. ஆனால் கசக்கும் காய்கறிகளில் தான் அதிகமான சத்துக்களும், நன்மைகளும் இருக்கும். அப்படி கசப்பு அதிகமாகவும் நன்மைகள் அதிகமாகவும் இருக்கும் ஒரு காய்கறி என்றால் அது பாகற்காய். அதுமட்டுமின்றி பாகற்காய் ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. எனவே பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பாகற்காய் ஜூஸில் இவ்வளவு நன்மைகள் இருக்கா
- பாகற்காய் ஜூஸ் குடித்தால் அதில் உள்ள சேர்மங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமின்றி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும் உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மேலும் இது நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
- பாகற்காய் ஜூஸ் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் வயிற்றுப்போக்கு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
Also Read: பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? – ஆய்வில் அதிர்ச்சி தகவல் – மக்களே உஷாரா இருங்க!
- அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
- கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் அழற்சி போன்ற கல்லீரல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க மிகவும் உதவுகிறது.
- பாகற்காய் ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. அவை மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.
- பாகற்காய் ஜூஸ் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- குறிப்பாக புற்று நோயை எதிர்த்து போராட உதவுகிறது.
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
பெண்களின் மாதவிடாய் நேரத்தில் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்?
மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு
உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் 2024 இல் உருவாக்கப்பட்டது