வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

சட்டமன்றத்தில் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை சார்ந்த கொள்கை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த அறிவிப்பில், உதவி மருத்துவர் (பொது) பிரிவில் உள்ள 2,553 பணியிடங்கள், உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பிரிவில் உள்ள 26 பணியிடங்கள், மருந்தாளுநர் பதவிப்பிரிவில் உள்ள 425 இடங்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் / தாய்மை துணை செவிலியர் பதவிப்பிரிவில் உள்ள 367 இடங்கள்,

அதனை தொடர்ந்து கண் மருத்துவ உதவியாளர் பதவியில் உள்ள 100 காலிப்பணியிடங்கள், அத்துடன் மருந்தாளுநர் (சித்தா) பதவிப்பிரிவில் உள்ள 49 இடங்கள், உள்ளிட்ட 21 வகையான பதவிகளில் காலியாக உள்ள 3,645 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி ! துரிதமாக செயல்பட்டதால் குவியும் பாராட்டுகள்!

மேலும் நடைபெறும் அனைத்து தேர்வுகளிலும் கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வு இடம்பெறும். தேர்வுகளை நெறிப்படுத்தி, வலுவான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து முறைகேடுகள் ஏற்படாத வகையில் தேர்வுகளை நடத்தி முடிக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *