ஊட்டி & கொடைக்கானல் போக இ-பாஸ் கட்டாயம் நீட்டிப்பு … எப்போது வரை தெரியுமா? நீதிமன்றம் உத்தரவு!!ஊட்டி & கொடைக்கானல் போக இ-பாஸ் கட்டாயம் நீட்டிப்பு … எப்போது வரை தெரியுமா? நீதிமன்றம் உத்தரவு!!

பிரபல சுற்றுலா தலமான ஊட்டி & கொடைக்கானல் போக இ-பாஸ் கட்டாயம் நீட்டிப்பு: தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வருவது கொடைக்கானல் மற்றும் ஊட்டி தான். தமிழ்நாட்டில் எத்தனையோ இடங்கள் இருந்தாலும் கூட, மேற்கண்ட இடங்களுக்கு செல்ல தான் அதிகமான சுற்றுலா பயணிகள் விரும்புவார்கள். அங்கிருக்கும் இயற்கை காட்சிகளை பார்ப்பதற்காகவே அங்கு கூட்டங்கள் படையெடுத்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு E பாஸ் முக்கியம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு உத்தரவு விட்டது. அதன்படி ஜூன் 30ம் தேதி வரை கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்ல இ- பாஸ் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் நாளை மறுநாளுடன்   இ- பாஸ் முறை முடிவுக்கும் வர இருக்கும் நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Also Read: சென்னைக்கு விமானத்தில் கொக்கைன் கடத்தி வந்த பெண் – அதிரடியாக கைது செய்த காவல்துறை!

அதாவது, ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் பெறும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் epass.tnega.org என்ற இணையதளம் வாயிலாக E pass பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. kodaikanal news – tourist place – ooty place – e pass news -tamilnadu news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *