தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கும் மதுரை – பெங்களூரு வந்தே பாரத் எப்போது தெரியுமா. சமீபத்தில் இதன் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின்னர் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று சொல்லாமலே இதுந்தது. அதனால் நாள்தோறும் இதை பற்றிய வதந்திகள் பரவின. தற்போது தென்மண்டல ரயில்வே துறை ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மதுரை – பெங்களூரு வந்தே பாரத் எப்போது
தினசரி எக்ஸ்பிரஸ்:
தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடி மற்றும் நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொழில்நுட்ப நகரமான பெங்களுருவில் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரும்பாலானோர் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் இந்த ரயில்களில் சாதாரண நாட்கள், பண்டிகை நாட்கள், வாரவிடுமுறை நாட்கள் என எல்லா நாட்களிலும் பயணிகளின் கூட்டம் இருந்து வருகிறது.
வந்தே பாரத் சொகுசு ரயில்:
பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சமீபத்தில் மதுரையில் இருந்து பெங்களூருவிற்கு வந்தே பாரத் சொகுசு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் மதுரை ரயில்நிலையத்தில் நடந்தன. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இதன் சோதனை ஓட்டம் கிடப்பில் போடப்பட்டன. பின்னர் தேர்தல் முடிந்து கடந்த 17 ந் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மேலும் பல கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ரயில்களின் இயக்கம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மதுரை-பெங்களூரு இடையே 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் இந்த சொகுசு ரயிலை பயணிகள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
சாத்தூரில் பட்டாசு ஆலை வெடித்து 3 பேர் பலி – தீவிரம் காட்டும் மீட்பு படையினர்!!
ரயிலின் மார்க்கம்:
தற்போது இந்த ரயில் மதுரையில் இருந்து கிளம்பி திருச்சி வழியாக கரூர் , நாமக்கல் வழியாக செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் செவ்வாய் கிழமை தவிர பிற நாட்களில் இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். இந்த ரயில்(வ.எண்:06003) மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.50 க்கு திருச்சி சென்றடைகிறது. பின்னர் மதியம் 12.50 மணிக்கு கிருஷ்ணராஜ புரம் ஜங்ஷன் சென்று கடைசியாக மதியம் 1 மணிக்கு எஸ்.எம்.வி.பி(பெங்களூரு ) ரயில்நிலையம் சென்றடைகிறது.
இதே போல் மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.20 க்கு திருச்சி வந்தடைகிறது. பின்னர் இரவு 9.45 மணிக்கு மதுரை வந்தடைகிறது. 8 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் தற்போதைக்கு சிறப்பு ரயிலாகவும், பயணிகளின் வரவேற்பை பொறுத்து நிரந்தர ரயிலாகவும் இயக்கப்பட உள்ளது.
எப்போது :
ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பிரதமரின் ஒப்புதல் கிடைத்த பிறகு இந்த ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் மதுரையில் இருந்து இயக்கப்படும் இந்த சொகுசு ரயிலயும் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த ரயிலுக்கான இயக்க நேரம், கட்டண விபரம் குறித்த விபரங்கள் தற்போது வரை ரயில்வே துறையால் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.